மலைகளின் அரசிக்கு மகுடம் சூட்டிய மேகங்கள் - வானில் வர்ணஜாலம் காட்டிய ரம்மிய காட்சி

Update: 2024-12-15 09:10 GMT

மலைகளின் அரசிக்கு மகுடம் சூட்டியது போல உதகையில் அதிகாலை வேளையில் மேகங்கள் வர்ணஜாலம் படைத்தன... பனிமூட்டம் மலைகளின் மேல் படர்ந்து உதகை ரம்மியமாக காட்சியளிக்கிறது. உதகை நகரில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் சமவெளி பள்ளத்தாக்கு பகுதிகளில் சூரிய உதயத்தின் போது கருஞ்சிவப்பு நிறத்தில் தோன்றி ஆரஞ்சு நிறமாக மாறி பின் முற்றிலும் வெள்ளை போர்வை போர்த்தியது போல் மேக மூட்டம் காணப்படுகிறது. அதிகாலை வேளையில் சூரியன் உதிக்கும் நேரத்தில் நீல நிறமாக உள்ள வானம் அதன் கீழ் மலைகள் , மலைகளை தொட்டு தவழ்ந்திருக்கும் மேகங்கள், பனிமூட்டம் நேர்கோடாக ஓவியம் தீட்டியது போல் காட்சியளிப்பது கண்களுக்கு விருந்தளிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்