4 ஆண்டுக்கு முன் 4 இளம்பெண்கள்.. நாடு முழுக்க தேடிய பெற்றோர்,போலீஸ் -4 பேரும் குழந்தை, குட்டிகளோடு..
ஒடிசாவில் மாயமான 4 இளம்பெண்கள் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
ஒடிசா மாநிலம் போலங்கீர் பகுதியில் இருந்து 2019ல் மாயமான 4 இளம்பெண்கள், திருப்பூரில் இருப்பதாக அம்மாநில போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் திருப்பூர் வந்த ஒடிசா தனிப்படை போலீசார், பனியன் நிறுவனத்தில் தங்கியிருந்த 24 வயதுடைய பெண்கள் 4 பேரை மீட்டனர். விசாரணையில், ஒடிசாவில் இருந்து காதலர்களுடன் திருப்பூர் வந்த 4 இளம்பெண்களும், திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளுடன் வாழ்வது தெரியவந்தது. இதையடுத்து, மீட்கப்பட்ட 4 பெண்களையும், ஒடிசா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக தனிப்படை போலீசார் அழைத்து சென்றனர்.