தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீராங்கனை நித்யா ராம்ராஜ், தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு தடகள சங்கம் சார்பாக இந்திய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த நித்யா ராம்ராஜ் இந்திய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் தொடரின் 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.