``கையே போச்சு.. கேட்டா கொலை பண்ணுவேனு சொல்றாரு’’ பிரைவேட் டாக்டரால் கதிகலங்கிய நபர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் கை முறிவுக்கு தவறான சிகிச்சை அளித்ததால் கையை அசைக்க முடியவில்லை என மருத்துவர் மீது பாதிக்கப்பட்டவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
வாணியம்பாடி அடுத்த கேகே.தெருவை சேர்ந்த முகமது ஜாவித்துக்கு ஆம்பூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர் கலீல் பாஷா, கையில் அறுவை சிகிச்சை செய்துள்ளார். ஆனால் அதன் பிறகு கையில் வலி அதிகமாகவே வேறொரு மருத்துவமனைக்குச் சென்று காட்டியபோது தவறான சிகிச்சை அளிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மருத்துவர் கலீல் பாஷாவிடம் கேட்டதற்கு அவர் தமக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறும் ஜாவித், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இது தொடர்பாக புகார் மனு அளித்துள்ளார்.