நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரத்தில் தொடரும் கனமழை காரணமாக, பல்வேறு ஆறுகளில் பேரிரைச்சலோடு தண்ணீர் ஓடுகிறது. மாயாறு, புன்னம்புழா ஆறு, பொன்னானி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்நிலைகளை கண்காணித்து வரும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.