குழந்தை உயிரை பறித்த பிளாஷ்பேக்.. வாஷிங் மெஷினுக்குள் சமாதி "ஜாலியா இருக்கியா".. குலைநடுக்க வார்த்தை

Update: 2024-09-10 02:04 GMT

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தை அடுத்துள்ள ஆத்துகுறிச்சியைச் சேர்ந்த தம்பதி விக்னேஷ்-ரம்யா. விக்னேஷ் கொத்தனாராகவும் அவரது மனைவி கூலித் தொழிலாளியாகவும் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களுடைய மூன்று வயது இளைய மகன் சஞ்சய் பால்வாடிக்குச் செல்வதற்காக வீட்டிற்கு முன் விளையாடிக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது. அப்போது திடீரென சஞ்சய் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த தம்பதி தெருவில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேடியுள்ளனர். ஆனால், எதிர் வீட்டில் வசித்து வரும் தங்கம்மாள் மீது சந்தேகம் வலுத்து இருக்கிறது.

விக்னேஷ் வீட்டிற்கு நேர் எதிர் வீட்டில் தங்கம்மாள் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இரு குடும்பத்தினரும் அடிக்கடி சிறு பிரச்சனைகளுக்காக தகராறில் ஈடுபட்டு வந்து இருக்கின்றனர். மேலும் விக்னேஷின் குழந்தைகள் அடிக்கடி தங்கம்மாள் வீட்டின் முன்பு விளையாடியதால் அது தொடர்பாகவும் இரு குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது

இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த சாலை விபத்தில் தங்கம்மாளின் மகன் வெங்கடேசபெருமாள் உயிரிழந்து இருக்கிறார். மகனின் துக்க நிகழ்வில் விக்னேஷ் குடும்பத்தினர் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் தனது மகனை விக்னேஷின் குடும்பத்தினர் தான் பில்லி சூன்யம் வைத்து தனது மகனைக் கொன்றதாகக் கருதி இருக்கிறார் தங்கம்மாள். இதனைத் தொடர்ந்து சஞ்சயை பாலித்தீன் கவரில் சுற்றி, அதன் பின்பாக போர்வை மற்றும் துணிகளால் மூடி வாஷிங்மெஷினில் வைத்து அடைத்து இருக்கிறார். இதில் மூச்சு திணறி சஞ்சயை உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து தங்கம்மாளை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனிடையே, மூன்று வயது சிறுவனின் உடல் நெல்லை மாவட்ட ஆட்சியர் சிறப்பு அனுமதியுடன் பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிறுவனின் சொந்த ஊரான ஆத்துகுறிச்சிக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்குகளை முடித்து, அவர்களது தோட்டத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது


Tags:    

மேலும் செய்திகள்