`G.O.A.T.-க்கு ரூ25; வேட்டையனுக்கு ரூ10..' - டிக்கெட் போட்டு படம் காட்டிய பள்ளி- நெல்லையில் சர்ச்சை

Update: 2024-11-12 15:17 GMT

நெல்லையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய்யின் திரைப்படங்களை ஒளிபரப்பியதால் சர்ச்சை எழுந்துள்ளது...

அம்பாசமுத்திரம் அருகே வி.கே.புரத்தில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 9ம் தேதி மதியம் விஜய்யின் கோட் திரைப்படம் எல்இடி டிவியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. அதே போல் முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு ரஜினிகாந்தின் வேட்டையன் படம் போட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது... கோட் படத்திற்கு 25 ரூபாயும், வேட்டையனுக்கு 10 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட்ட விவகாரம் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் இந்து முன்னணி நிர்வாகிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் உத்தரவின் பேரில் கல்வி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மாணவர்களுக்கு மன அளவிலான அழுத்தத்தை குறைப்பதற்காக படம் ஒளிபரப்பப் பட்டதாகவும், வசூல் செய்யப்பட்ட தொகையை உடனடியாக மாணவிகளிடம் திருப்பி வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் பாடம் கற்பிக்கும் பள்ளியில் திரையரங்கை போல படம் ஒளிபரப்பியது தவறு என்பதால் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்