நெல்லையை அதிரவைத்த கல்குவாரி மண் சரிவு.. ``கண்டிப்பா இது நடக்கும்'' - சப் கலெக்டர் உறுதி
நெல்லை மாவட்டம் இருக்கன் துறை பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியில் ஏற்பட்ட திடீர் மண் சரிவில் ஒருவர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த மூன்று பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் ஆவரைகுளம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்பதற்கு சொத்தமான கல் குவாரியில் திடீரென மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் குவாரி தரைப்பகுதியில் இருந்த ஜேசிபி ஆபரேட்டர், லாரி ஓட்டுநர் உள்ளிட்ட 4 பேர் இடுப்பாடுகளுக்குள் சிக்கினர். இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மூன்று பேரை பணியாளர்கள் மீட்ட நிலையில், லாரியுடன் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தவரை இரண்டு மணி நேரமாக போராடி தீயணைப்புத் துறையினர் மீட்டபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது. அனுமதி பெற்று நடத்தப்படும் குவாரி என்ற போதிலும், விதிமுறைகள் மீறப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதால் குவாரியை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.