"பெண்ணுக்கு ஏதாவது ஆச்சுன்னா வெட்டி வீசிடுவேன்" -போலீஸ் ஸ்டேஷன் முன் மிரட்டல் விடுத்த நபர்-பரபரப்பு

Update: 2024-08-18 02:17 GMT

நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தநிலையில், உறவினர்கள் ஒருவரை ஒருவர் வெட்டி வீசிவிடுவதாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வட்டகொல்லி கிராமத்தை சேர்ந்த சதீஷ் என்பவரும், பர்கூர் அடுத்த ஒப்பதவாடியை சேர்ந்த ஜெயசீலா என்பவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமணத்துக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காதல்ஜோடி நாட்றாம்பள்ளி காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அங்கு வந்த பெண் வீட்டார், பெண்ணுக்கு ஏதாவது ஆச்சுனா அனைவரையும் வெட்டி வீசிவிடுவதாக தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்