பூட்டி கிடந்த கழிவறை - ஊரோடு போராட்டத்தில் குதித்த மக்கள்.. நாமக்கலில் அதிர்ச்சி
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நகராட்சி கழிவறையை முன்னறிவிப்பின்றி பூட்டி சென்றதால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த சுகாதார ஆய்வாளர் ஒப்பந்ததாரர்களை வரவழைத்து, பொதுக் கழிப்பிடத்தை திறக்க செய்தார். 2 ரூபாய் கட்டணம் தர மறுத்ததால் கழிவறையை மூடியதாக ஒப்பந்ததாரர் தெரிவித்துள்ளார்.