சீர்காழி அருகே மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் மீது சமையலர் தவறுதலாக சுடுநீர் ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் திருக்கருக்காவூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வரும் 8 வயது சிறுவன் சமையல் அறை முன்பு விளையாடியுள்ளான். சமையலர் சுதா முட்டை அவிப்பதற்கு பயன்படுத்திய வெந்நீரை எடுத்து வெளியே ஊற்றியபோது குறுக்கே வந்த மாணவன் மீது தண்ணீர் கொட்டியுள்ளது. அதில் படுகாயம் அடைந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.