அந்தோணியார் ஆலயத்தில் வினோத வழிபாடு செய்த மக்கள்... மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே கஞ்சாநகரம் கிராமத்தில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் பக்தர்கள் முட்டி போட்டு வினோத வழிபாடு செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு அன்று வினோதமான முறையில் இங்கு உள்ள பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருவது வழக்கமாக உள்ளது.
அந்த வகையில் இம்முறை ஆலயத்தின் எதிரே இருக்கக்கூடிய குளத்தில் குளித்துவிட்டு மாலை அணிந்து, மெழுகுவர்த்தி கையில் ஏந்தி கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பின்னர் சாலையில் அங்கப்பிரதட்சணம் செய்தும் முட்டி போட்டுக்கொண்டும், கையில் தீச்சட்டி ஏந்தியும் சுமார் 500 மீட்டர் தொலைவிற்கு இந்த நேர்த்திக்கடனை செலுத்தினர்.