`பூர்வஜென்ம பாவம்'.. மகாவிஷ்ணுக்கு விழுந்த அடி - நாள், நேரம் குறித்து பறந்த அதிரடி உத்தரவு

Update: 2024-09-10 02:19 GMT

மகாவிஷ்ணு சர்ச்சை குறித்து விசாரணை நடத்தி வரும் பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்கு வருகை தந்து விசாரணை மேற்கொண்டார். அப்போது பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியை தமிழரசியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட அவர், நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்தவர் யார்? அதிகாரிகள் யாரேனும் கொடுத்தார்களா? தன்னிச்சையாக நீங்களே நடத்தினீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

இரண்டாவதாக, மகாவிஷ்ணுவை அறிமுகம் செய்து வைத்து, சிபாரிசு செய்தது யார்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த 2 கேள்விகளுக்கும் நேரடியாக, எழுத்துபூர்வமான விளக்கத்தை செவ்வாய்க்கிழமை நண்பகலுக்குள் கொடுக்க வேண்டும் என்று அவர் கண்டிப்புடன் கூறியுள்ளார்.

இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து தலைமைச் செயலகத்தில் கல்வித்துறை அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்ட தலைமைச் செயலாளர் முருகானந்தம், இரண்டு கேள்விகளுக்கும் பதில் அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், அதிகாரிகள் பதில் தெரியாமல் விழித்ததாக கூறப்படுகிறது. இந்த இரு கேள்விகளுக்கும் தலைமை ஆசிரியர்கள், வெளிப்படையாக பதில் கூறினால் மட்டுமே விசாரணை முழுமை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்