டங்ஸ்டன் சுரங்கம் - போராட்டத்தை வாபஸ் வாங்கிய விவசாயிகள்

Update: 2024-11-30 04:13 GMT

மேலூர் வட்டம் அரிட்டாபட்டி கிராமத்தில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைய உள்ளதாக மத்திய சுரங்க அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்கான ஏலத்தை வேதாந்தா நிறுவனம் எடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுரங்கத்துக்கு அனுமதி கோரி விண்ணப்பம் செய்யப்பட்டால் ஏற்க மாட்டோம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு வழங்கியுள்ள உரிமத்தை ரத்து செய்ய கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சுரங்கம் அமைப்பதற்கு எதிராக அப்பகுதி கிராம விவசாயிகள், மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலூர் பேருந்து நிலையம் பகுதியில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் போராட்டம் செய்தனர். அவர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி, இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என உறுதியளித்தார். திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் உறுதியளித்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள், பொதுமக்களிடம் ஆட்சியர் சங்கீதாவும், அமைச்சர் மூர்த்தியும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போதும் சுரங்கம் அமையாது என அமைச்சர் உறுதியளித்ததால் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்