1997ல் ரூ.60 வழிப்பறி செய்தவரை 27 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளியாக கைது செய்த மதுரை போலீசார்

Update: 2024-11-10 02:48 GMT

மதுரை ஜக்காதோப்பு பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். 1997ஆம் ஆண்டில் 60ரூபாய் வழிப்பறி செய்ததாக கைது செய்யப்பட்ட இவர், பின்னர் தலைமறைவானார். நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தும், காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாமல் வழக்கு நிலுவையில் இருந்த‌து. இந்நிலையில், நிலுவையில் உள்ள பழைய வழக்குகளில், தலைமறைவானவர்களை பிடித்து வழக்குகளை முடிக்கும் நடவடிக்கையில் தனிப்படை போலீசார் ஈடுபட்டனர். அந்த வகையில், ஜக்காதோப்பு பகுதிக்கு சென்று பன்னீர் செல்வம் குறித்து விசாரணை மேற்கொண்டர். அப்போது, சிவகாசியில் குடும்பத்தோடு வசிப்பதாக தகவல் கிடைத்த‌தும், அங்கு விரைந்த போலீசார், மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆய்வு செய்வதாக கூறி, விவரங்களை சேகரித்தனர். இதையடுத்து, ஒயின்ஷாப்பில் பணிபுரிந்து வந்த பன்னீர்செல்வத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 60 ரூபாய் வழிப்பறி வழக்கில் 27 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை கைது செய்த போலீசாரை, காவல் ஆணையர் லோகநாதன் பாராட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்