பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களில் நடந்த அதிரடி சோதனை

Update: 2024-12-06 02:28 GMT

பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களில் நடந்த அதிரடி சோதனை


மதுரை ரயில் நிலையத்தில் ரயில்வே நடைபாதை, பயணிகள் காத்திருப்பு அறை, பார்சல் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் மோப்பநாய் உதவியடன் ரயில்வே போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கினர்.

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தினர். பயணிகளின் உடமைகள் மற்றும் பார்சல்கள் மோப்ப நாய் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது . ரெயில்வே பாதுகாப்புப்படை படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் உடைமைகளை ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர்

தீவிரமாக சோதனை செய்தனர். ரயில் நிலைய வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உதகையில் ரயில்வே நிலையம் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும் பேருந்து நிலையம் உள்ளிட்ட

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும்

அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பிலும், வாகன சோதனையிலும் ஈடுபட்டுள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்