பெண்ணுக்கு பாலியல் தொல்லை - கவுன்சிலர் மீது பரபரப்பு புகார் | Madurai

Update: 2024-12-10 16:16 GMT

பெண்ணுக்கு பாலியல் தொல்லை - கவுன்சிலர் மீது பரபரப்பு புகார் | Madurai

மதுரையில் பழங்குடியின பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் மாநகராட்சி கவுன்சிலர் மீது ஆன்லைனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட விராட்டிபத்து பகுதியைச் சேர்ந்த சண்முகவேல்- சூரியகலா தம்பதியினர், தங்களுக்கு சொந்தமான கோவில் நிலத்தில் தண்ணீர் தொட்டி அமைத்துள்ளனர். இதற்கு அந்த பகுதியை சேர்ந்த திமுக கவுன்சிலர் நாகநாதன் என்பவர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, அந்த தண்ணீர் தொட்டியை மூடுமாறு மிரட்டுவதாகவும், தனியாக இருக்கும் நேரத்தில் வந்து தனது பாலியல் இச்சைக்கு இணங்குமாறு தொந்தரவு செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக அந்த பெண் முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் காவல் துறையினருக்கும் ஆன்லைன் மூலம் புகார் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்