நுழைவுச்சீட்டு இல்லாமல் வந்த தனது ஆதரவாளரை விமான நிலையத்தின் உள்ளே விடும்படி மத்திய பாதுகாப்பு படை அதிகாரியிடம் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏபட்டது... விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த முதல்வர் ஸ்டாலினை வழியனுப்ப அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள வருகை தந்தனர். முதல்வர் சென்ற பின், விமான நிலையத்தின் உள்ளே தனது ஆதரவாளரை விடும்படி விமான நிலைய நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரியிடம் எம்.எல்.ஏ வாக்குவாதம் செய்தார். போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் சமாதானம் செய்த பின் அவர் அங்கிருந்து சென்றார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.