புத்தாண்டை முன்னிட்டு, தசரா புகழ் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ஆயிரத்து 8 பால்குடம் ஊர்வலம் வெகு விமர்சையாக நடந்தது. உலக நன்மைக்காக
குலசேகரன்பட்டினம் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க இந்த 18 பால்குடம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, முத்தாரம்மனுக்கு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து கோயிலில் வில்லிசை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபாடு செய்தனர்.