மனைவியோடு சேர்ந்து அண்ணன், அண்ணியை வெட்டி கொன்ற தம்பி.. 17 வயதிலேயே முதல் கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருக்கு திருமணமாகி ருக்மணி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். மாரிமுத்துவுக்கும், அவருடைய தம்பி முருகனுக்கும் இடையே பாதை பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதற்கிடையே மாரிமுத்து அந்த பாதையை டிராக்டரை நிறுத்தி அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் தம்பி முருகன் மற்றும் அவருடைய மனைவி சிவ ரஞ்சினி ஆகியோர் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். இந்தநிலையில், மாரிமுத்து தனது மனைவி, குழந்தைகளுடன் பைக்கில் தீபாவளியை கொண்டாட வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு முற்றியநிலையில் முருகன் தனது மனைவியுடன் சேர்ந்து அண்ணன் மாரிமுத்து மற்றும் அண்ணியை கொடூரமாக வெட்டி படுகொலை செய்தார். இருவரும் ரத்தவெள்ளத்தில் பலியானதை அடுத்து தம்பதி தப்பி ஓடிவிட்டது. தகவலறிந்து வந்த போலீசார் செல்போன் சிக்னலை வைத்து முருகனை கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள சிவரஞ்சனியை தீவிரமாக தேடி வருகின்றனர். கைதான முருகன் 17-வது வயதிலேயே தனது தந்தையின் தலைமேல் கல்லைப் போட்டு கொலை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.