கிருஷ்ணகிரி மாணவி பாலியல் சம்பவம்.. திடீர் மாற்றத்தால் அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
போச்சம்பள்ளி அருகே அரசு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, அந்த பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர்கள் அனைவரும் வேறு பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனவர். தற்போது, வேறு பள்ளிகளில் இருந்து 4 பெண் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் மன நல ஆலோசனை வழங்கப்படுகிறது. குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி சார்பில் மன நல ஆலோசனை குழுவும், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் மன நல மருத்துவர்களும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மன நல ஆலோசனை அளிக்க உள்ளனர்.