தூக்கத்தை கலைத்த ஹோட்டல் ஓனர்.. பீர் பாட்டிலால் தலையை திறந்த சம்பவம் -துடிதுடித்து பலியான உரிமையாளர்

Update: 2024-05-30 12:40 GMT

பெரம்பலூர் மாவட்டம் சோலை நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். தனது சகோதரருடன் சேர்ந்து சென்னை, கோயம்பேட்டில் உணவகம் நடத்தி வரும் இவர், சம்பவத்தன்று தன் கடை முன் மதுபோதையில் தூங்கிக் கொண்டிருந்த கூலித்தொழிலாளியை எழுப்பி திட்டியதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த கூலித்தொழிலாளி அருகில் கிடந்த பீர் பாட்டிலை எடுத்து சேகரை தலையில் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவத்தில், நெற்குன்றத்தை சேர்ந்த சக்தி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்