திடீரென ரோட்டில் பீறிட்டு அடித்த குடிநீர்.. அதிர்ந்து பார்த்த மக்கள்.. பரபரப்பு
கோவை சிங்காநல்லூரில் குடிநீர் திட்டப்பணியின் போது ராட்சத குழாய் உடைந்ததால் கோடைகாலத்தில் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு 24 மணி நேரமும் சுத்தமான குடிநீர் கிடைக்கும் வகையில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சிங்காநல்லூர் அருகே சூயஸ் குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்ற போது, ஜேசிபி இயந்திரம் முக்கிய குடிநீர் குழாய் மீது பலமாக மோதியதால் பெரும் சத்தத்துடன் குழாயில் உடைப்பு ஏற்பட்டு லட்சக்கணக்கான லிட்டர் குடிதண்ணீர் வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.