லிட்டில் காஷ்மீராக மாற தொடங்கிய கொடைக்கானல் - கண்களை கவரும் காட்சி | Kodaikanal | Snow Fall
மலைகளின் இளவரசியான கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடும் உறைபனி நிலவி வருகிறது...வழக்கமாக டிசம்பர் மாத தொடக்கத்தில் உறைபனி தொடங்கி, மார்ச் முதல் வாரம் வரை நீடிக்கும், ஆனால் இந்த ஆண்டு உறைபனி துவங்க சற்றே தாமதமானது. டிசம்பர் மாத இறுதியில் ஒரு சில நாள்கள் மட்டும் உறைபனி இருந்த நிலையில் இன்று உறைபனி மீண்டும் காணப்பட்டது... நேற்று கொடைக்கானல் மலைப்பகுதியில் வெப்பநிலை இரவில் 10 டிகிரி செல்சியசாகவும் இன்று அதிகாலையில் 9 டிகிரியாகவும் பதிவானது. இதன் காரணமாக ஜிம்கானா நீர் பிடிப்பு பகுதி, பாம்பார் புரம், கீழ்பூமி , பியர் சோலா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் உறை பனி நிலவியது. ஜிம் கானா புல்வெளிகளில், செடிகளின் இலைகளில் பனி படர்ந்து வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் காட்சியளித்தது...