10 நாட்களில் மர்மமான முறையில் பலியான 9 பசுமாடுகள்..- கரூரில் அதிர்ச்சி

Update: 2024-06-12 12:02 GMT

கரூரில் கடந்த 10 நாட்களில் அடுத்தடுத்து 9 கறவை மாடுகள் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், விவசாய நிலத்தில் இருந்து வெளியேறும் சாயக்கழிவால் தனது மாடுகள் உயிரிழந்ததாக பெண் விவசாயி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

கரூர் மாநகராட்சிக்கு உள்பட்ட திருமாநிலையூரைச் சேர்ந்த ஜாஸ்மின் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக கறவை மாடுகளை வளர்த்து வருகின்றனர். கடந்த 10 நாட்களில் மட்டும் அவர்களுக்குச் சொந்தமான 9 மாடுகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன. இதனால் வேதனை அடைந்துள்ள ஜாஸ்மின் குடும்பத்தினர், அருகில் உள்ள சாய ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவு நீர் விவசாய நிலத்தில் கலப்பதால் மாடுகள் உயிரிழப்பதாக சந்தேகம் தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து கால்நடைத்துறை, வருவாய்த்துறை, மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் ஆகிய இடங்களில் பலமுறை புகாரளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இன்று 2 மாடுகள் உயிரிழந்த நிலையில் மாநகராட்சி சுகாதார அலுவலர் லட்சியவர்ணா உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்தனர். மேலும் மாடுகள் உயிரிழப்பதை தடுக்க அரசு உரிய தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்