ஒரே வீட்டில் 103 சவரன் நகைகள் கொள்ளை..பக்கத்தில் இருந்த திருடன் - சிவகங்கையை அதிரவிட்ட சம்பவம்

Update: 2024-11-25 04:00 GMT

ஒரே வீட்டில் 103 சவரன் நகைகள் கொள்ளை..பக்கத்தில் இருந்த திருடன் - சிவகங்கையை அதிரவிட்ட சம்பவம்

காரைக்குடி அருகே 103 சவரன் நகைகள் திருட்டு வழக்கில் தொடர்புடைய இருவரை போலீசார் கைது செய்து நகைகளை மீட்டனர்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கருவியப்பட்டி கிராமத்தில் சேதுராமன் என்பவரது வீட்டில் இருந்த 103 சவரன் தங்க வைர நகைகள் திருடு போனது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் 3 தனிப்படைகளை அமைத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் எதிர் வீட்டை சேர்ந்த சுரேஷ் என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தபோது ஆடம்பர செலவுக்காக நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து சுரேஷ் மற்றும் அவரிடம் இருந்து நகைகளை வாங்கிய காரைக்குடியை சேர்ந்த சோமசுந்தரம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 103 சவரன் தங்க வைர நகைகள் 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். 

Tags:    

மேலும் செய்திகள்