காரைக்காலில் நரிக்குறவர் சமுதாய மக்களின் பிள்ளைகள் பள்ளி செல்வதற்காக மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் ஆட்டோ வசதியை ஏற்படுத்தி தந்தார். தங்கள் பிள்ளைகள் பள்ளிக்கு செல்வதற்கு ஆட்டோ வசதி செய்து தர வேண்டும் என நரிக்குறவர் சமுதாய மக்கள் கோரிக்கை வைத்தனர். உடனே அந்த பகுதியில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க தலைவரை வரவழைத்த ஆட்சியர், குறைந்த செலவில் அவர்களுக்கு சேவை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க தலைவரும் ஒத்துக்கொண்டார்.