கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் இளைஞர் அந்தரத்தில் தூக்கி வீசப்பட்டு, கார் தலைகுப்புற கவிழ்ந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
சாமியார்மடம் பகுதியை சேர்ந்த பெஸ்கி என்பவர் முளகுமூடு பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர் திசையில் அதிவேகத்தில் வந்த கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பெஸ்கி தூக்கி வீசப்பட்ட நிலையில், எபனேசர் என்பவர் ஓட்டி வந்த கார் தலைகீழாக கவிழ்ந்தது.