பள்ளி சிறுமியை மயக்கி கேரளாவில் பதுங்கிய இளைஞன் - தாயே மகளை அனுப்பிவைக்க வைத்த அந்த வார்த்தை

Update: 2024-11-14 09:52 GMT

பள்ளில் இருந்து விருது வாங்கச் செல்வதாகக் கூறி மாணவியை அழைத்துச் சென்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த சிறுமி தனியார் பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வருகிறார்.படிப்பதற்காகத் தாயின் செல்போனை பயன்படுத்தி வந்த சிறுமி இன்ஸ்டாகிராம் செயலியைப் பதிவிறக்கம் செய்து சக மாணவிகளுடன் சாட் செய்து வந்து இருக்கிறார். அப்போது அஞ்சுகிராம் பகுதியைச் சேர்ந்த சிவ பிரசாத் என்ற இளைஞருடன் சிறுமிக்குப் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது.இதனைத் தொடர்ந்து சிறுமியைக் காதலிப்பதாகக் கூறியதால் பல்வேறு இடங்களுக்குச் சுற்றியுள்ளனர். தொடர்ந்து சிறுமியுடன் சுற்றுலா செல்ல திட்டமிட்ட சிவ பிரசாத், சிறுமியின் தாயிடம் பள்ளியிலிருந்து ஆசிரியர் பேசுவதாகக் கூறி சிறுமியுடன் விருது வாங்கச் சிவகங்கை மாவட்டத்திற்குச் செல்வதாகக் கூறி இருக்கிறார். இதனை நம்பிய தாய் சிறுமியை அனுப்பி வைத்து இருக்கிறார். ஆனால் இரண்டு நாட்கள் கடந்த நிலையில் சிறுமி வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த தாய் பள்ளி நிர்வாகத்தைத் தொடர்பு கொண்ட போது சிறுமி சிவபிரசாத்துடன் சென்றது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.இதனைத் தொடர்ந்து கேரளாவில் பதுங்கி இருந்த இருவரையும் போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் சிவபிரசாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்

Tags:    

மேலும் செய்திகள்