ஆடு வளர்க்க இடம் கேட்டதால் உடைந்த மண்டை - பெற்றோரால் ரத்தம் வடிய வடிய ஓடிய மகன்

Update: 2024-12-24 06:08 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவருக்கு திருமணமாகி செல்வி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளநிலையில், ஜெகநாதனுக்கு உடல்நிலை சரியில்லாததால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். ஆடு வளர்த்து பிழைக்கலாம் என முடிவு செய்த ஜெகநாதன், தனது பெற்றோரிடம் ஆடு வளர்க்க இடம் கேட்டுள்ளார். அப்போது, அங்கு நின்ற ஜெகநாதனின் தங்கை சுந்தரி, சித்தப்பா திருவேங்கடம் ஆகியோர் தகராறு செய்ததுடன், அவரை செங்கற்கலால் தாக்கி உள்ளனர். தொடர்ந்து அவருடைய பெற்றோரும் தாக்கியதால் படுகாயமடைந்த ஜெகநாதனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சுங்குவார்சத்திரம் போலீசில் செல்வி அளித்த புகாரின்பேரில், ஜெகநாதனின் தங்கை சுந்தரி மற்றும் சித்தப்பா திருவேங்கடம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்