VAO-வை அலுவலகத்திற்குள் வைத்து பூட்டி விட்டு பைல்களை எடுத்து சென்ற அசிஸ்டண்ட்டால் பரபரப்பு

Update: 2024-12-17 01:49 GMT

கள்ளக்குறிச்சி அருகே கிராம நிர்வாக அலுவலரை அலுவலகத்தில் உள்ளேயே வைத்து பூட்டி விட்டு சென்ற கிராம உதவியாளரால் பரபரப்பு ஏற்பட்டது.

சின்னசேலம் அருகே உள்ள வடகனந்தல் மேற்கு கிராமத்தில், தமிழரசி என்பவர், கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். அதே அலுவலகத்தில் கிராம உதவியாளராக பணிபுரியும் சங்கீதா என்பவர், தமிழரசியை அலுவலகத்தில் உள்ளே வைத்து பூட்டி விட்டு, பதிவேடுகளை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றார். தமிழரசி சத்தமாக கூப்பிட்டும் சங்கீதா கண்டு கொள்ளாமல் இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழரசி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, அரை மணி நேரம் கழித்து விஏஓ அலுவலகத்தின் பூட்டு திறக்கப்பட்டது. கிராம உதவியாளரான சங்கீதா பணியில் சேர்ந்ததில் இருந்து, சரியாக வேலைக்கு வரமாட்டார் என்று ம், தாசில்தார், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆய்வு செய்ய வரும் நாளில் அலுவலகம் வரமாட்டார் என்றும் கூறப்படுகிறது. தற்போது பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலரை, அலுவலகத்திற்கு உள்ளேயே வைத்து பூட்டிவிட்டு சென்ற கிராம உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்