ஆழ்துளை கிணற்றுக்கு எதிர்ப்பு.. கொடூர தாக்குதல் - பரபரப்பு காட்சிகள்

Update: 2024-12-20 04:28 GMT

கள்ளக்குறிச்சி அருகே ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்ட கூலித் தொழிலாளியை கிராம மக்கள் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோட்டப்பாடி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே புதிதாக ஆழ்துளை கிணறு தோண்டும் பணி நடைபெற்றது. இதற்கு கிராம மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து பிரச்சினையில் ஈடுபட்டனர். ஊராட்சி மன்ற தலைவர் சமாதானம் செய்தாலும், அங்கிருந்த சிலர் கூலித்தொழிலாளி தேவேந்திரனை தாக்கியதால் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்