"தப்பு பண்ண ஆபிஸர்லாம் வீட்டுக்கு அனுப்பாம நல்லா சம்பளம் வாங்குறாங்க.." - மாற்றிய ஐகோர்ட் தீர்ப்பு

Update: 2024-11-21 08:07 GMT

தமிழகத்தை உலுக்கிய கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இது குறித்து விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தார் தெரிவித்திருப்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம் விரிவாக...

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் நிகழ்ந்த கோரத்தை தமிழகம் ஒரு போதும் மறக்காது..

கடந்த ஜீன் 19 ஆம் தேதி விஷ சாராயம் அருந்தி சுமார் 228 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், அதில் 68 பேர் உயிரிழந்த சம்பவமும் தமிழகத்தை ஸ்தம்பிக்கச் செய்திருந்தது...

இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த தமிழக சிபிசிஐடி போலீசார், சுமார் 24 பேரை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்..

இதில் 18 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது..

மேலும் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள, தமிழக அரசால் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

இந்நிலையில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த மக்களும், விஷச் சாராயத்தால் தங்களின் குடும்பத்தாரை இழந்தவர்களும் கருத்து தெரிவித்திருக்கின்றனர்... 

Tags:    

மேலும் செய்திகள்