3 நாட்களாக தண்ணீரில் தத்தளிக்கும் 2500 குடும்பங்கள் - நடுங்க வைக்கும் ட்ரோன் காட்சிகள்

Update: 2024-12-03 13:18 GMT

ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் பகுதியில் 2 ஆயிரத்து 500 குடும்பங்கள் தண்ணீரில் கடந்த மூன்று நாட்களாக தத்தளித்து வருகின்றன. விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அடுத்துள்ள இந்திரா நகர், காந்திநகர், பாண்டியன் நகர் மற்றும் கட்டபொம்மன் நகர் பகுதியில் வசிக்கும் சுமார் 2500 குடும்பங்கள், கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக மழை நீரில் தத்தளித்து வருகின்றன. இப்பகுதியில் கலைக்கல்லூரி, மாணவர் தங்கும் விடுதி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்