திருப்பத்தூர் அருகே ஜேசிபி இயந்திரம் திடீரென கொளுந்து விட்டு எரிந்த சம்பவம் அரங்கேறியது. கிருஷ்ணகிரி மாவட்டம் கதவணி பகுதியை சேர்ந்த சிவராமன் என்பவருக்கு சொந்தமான 20 லட்சம் மதிப்பிலான ஜேசிபி இயந்திரம், திருப்பத்தூர் மாவட்டம் ஜொள்ளகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் அளவிலான நிலத்தை சமன் செய்ய வந்துள்ளது. அப்போது பேட்டரியின் மின்கசிவால் ஏற்பட்டு ஜேசிபி இயந்திரம் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது.