"சிறையில் இஸ்லாமிய கைதிகள் உயிரோடு இருந்தால் போதும்"- கண்ணீருடன் கதறும் தாய்
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாத கைதிகளை சந்திக்க அதிகாரிகள் அனுமதி மறுத்ததால், உறவினர்கள் சிறை வாசலில் காத்திருப்பு பேராட்டத்தில் ஈடுபட்டனர். இந்து முன்னணி பிரமுகர்கள் கொலை வழக்கு, கோவை அத்வானி வெடிகுண்டு வழக்கு என பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், போலீஸ் பக்ருதீன் உள்ளிட்ட பயங்கரவாத கைதிகள், உயர் பாதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டுள்ளனர். இருவரையும் சந்திக்க அவர்களது குடும்பத்தின் புழல் சிறைக்கு வந்தனர். அங்கு சிறைத்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்தால் சிறை வாயிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.