மெரினா பீச் செல்ல கட்டணமா..?

Update: 2025-04-16 05:40 GMT

சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல கட்டணம் வசூலிக்கப்படும் என பரவிய தகவல் தவறானது என சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. நீலக்கொடி கடற்கரைத் திட்டத்தின் கீழ் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும், பராமரிப்பு பணிகளுக்கான கட்டணத்தை மாநகராட்சியே ஈடு செய்யும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் கூறியுள்ளார். நீலக்கொடி கடற்கரை திட்டத்தின் அடிப்படையில் சென்னை மெரினா கடற்கரையில் மேம்பாட்டு பணிகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்