நாமக்கல்லில் துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர தணிக்கை

Update: 2025-04-23 09:54 GMT

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நேற்று நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 28 பேர் பலியானார்கள். 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் ஆவார். இந்த சூழலில், காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாமக்கல்லில் முக்கிய சாலைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய படி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள நல்லிபாளையம் வழியாக செல்லும் வாகனங்களை சோதனை சாவடியில் நிறுத்தி தீவிர சோதனைக்கு பிறகே நாமக்கல் நகர பகுதிக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் முழுவதும் சுமார் 50 இடங்களில் 600 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், ரயில் நிலையம், கடைவீதி, வணிக வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்