நெல்லையில் 8ம் வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவன் பள்ளி தான் காரணமா? நடந்தது என்ன?

Update: 2025-04-16 02:17 GMT

குட்டி போடுவதற்காக மயில் இறகு ஒழிந்து கொண்டிருந்த புத்தக இடுக்கில் வெட்டரிவாள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. பள்ளி தொடங்கும் போது தேசிய கீதம் பாடிக் கொண்டிருந்த ஒரு மாணவன், அடுத்த சில மணி நேரத்தில் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்ப படுகிறான். நம்ப முடியாத இந்த வார்த்தைகள் அனைத்தையும் உண்மையாக்கி இருக்கிறது நெல்லையில் அரங்கேறிய சம்பவம்

நெல்லை பாளையங்கோட்டையில் இயங்கி வரும் தனியார்ப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தவர் தான் பாதிக்கப்பட்ட மாணவன். சம்பவத்தன்று வழக்கம் போல பள்ளிக்கு வந்த மாணவனை, வகுப்பறையில் வைத்தே சக மாணவன் ஒருவர் அரிவாளால் வெட்டி இருக்கிறார். இதை பார்த்து மற்ற மாணவர்கள் கூச்சல் போட, தாக்குதலைத் தடுக்க வந்த ஆசிரியையையும் அரிவாளால் வெட்டி இருக்கிறார் அந்த மாணவன். காயம்பட்டவர்களைச் சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அரிவாளால் வெட்டிய மாணவன், காவல் நிலையத்தில் சரணடைந்திருக்கிறார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், விசாரணை நடத்தியதில், பென்சிலால் ஏற்பட்ட தகாறு கொலை வெறியாக மாறி இருப்பது தெரியவந்திருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்