கரூர் வழியாக செல்லும் ரயில் சேவைகள் மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு | Karur
கரூர் வழியாக செல்லும் ரயில் சேவைகள் 3 நாட்களுக்கு மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.கரூர் வீரராக்கியம் மற்றும் மாயனூர் ரயில் நிலையங்களுக்கு இடையேயான பராமரிப்பு பணி காரணமாக, ஏப்ரல் 24, 26, 29 ஆகிய தேதிகளில்,ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி, பாலக்காட்டில் இருந்து திருச்சி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், கரூரிலும், மயிலாடுதுறையில் இருந்து சேலம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், மாயனூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பிற்பகலில் சேலத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், கரூரிலிருந்து புறப்பட்டு, மயிலாடுதுறை செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.