மனைவிக்கு கல்தா குடுத்த கணவர்..யோசிக்காமல் தர்ணாவில் குதித்த பெண்..கடைசியில் கிடைத்த கொடூர பரிசு
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கருமொழி பகுதியை சேர்ந்தவர் சரண்யா. இவரும், ஆதியாகுடி பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், சென்னையில் வசித்து வந்துள்ளனர். தம்பதி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்படவே, மனைவியை விட்டு பிரிந்து, மகேந்திரன் சொந்த ஊருக்கு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தன்னை விட்டு பிரிந்து சென்ற காதல் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி இளம்பெண் சரண்யா கணவர் வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரமடைந்த கணவரும், மாமியாரும் இளம்பெண்ணை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.