தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வல்லராமபுரம் கிராமத்தை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநரான சுப்பிரமணியன் என்பவரின் மகளின் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு தான் அணிவகுத்துள்ளது இந்த பிரமாண்ட சீர்வரிசை....
சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நடந்த விழாவில், நெற்கட்டும்செவல் அருகே உள்ள கீழ்புதூர் கிராமத்தில் இருந்து சீர்வரிசையை எடுத்து வந்தனர் தாய்மாமன்கள்....
பழங்கள், இனிப்பு கார வகைகள், அலங்கார பொருட்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட தாம்பூலங்களை பெரிய கண்டெய்னர் லாரியில் வைத்து, வான வேடிக்கைகள், மேளத்தாளங்கள் முழங்க பிரமாண்டமான முறையில் ஊர்வலமாக எடுத்து வந்தனர்..
ஊரார் மெச்சும் அளவிற்கு நடந்த இந்த சீர்வரிசை ஊர்வலத்தை ஊர் மக்கள் மட்டுமன்றி, சாலையில் வாகனத்தில் சென்று வந்தவர்களும் வியந்து பார்த்து வாய் பிளந்தனர்..
இவற்றையெல்லாம் பெருமையுடன் சுமந்து சென்ற தாய் மாமன்களை கண்ட பலரும்...மானூத்து மந்தையில பாடலை பேக்குரவுண்டில் ஒலிக்கவிட்டு சிலாகித்து வருகின்றனர்..