மலர் சந்தைகளில் பூக்களின் விலை அதிரடி உயர்வு | Flower prices

Update: 2025-01-14 02:43 GMT

பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை கோயம்பேடு மலர் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ மல்லிகைப்பூ 2 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ஐஸ் மல்லி ஆயிரத்து 900 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஜாதி மல்லி இரண்டாயிரம் ரூபாய்க்கும், ஒரு கிலோ முல்லை 2 ஆயிரத்து 400 ரூபாய்க்கும், ஒரு கிலோ கனகாம்பரம் ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அரளிப்பூ 400 ரூபாய், சாமந்தி 200 ரூபாய், சம்பங்கி 270 ரூபாய், பன்னீர் ரோஸ் 200 ரூபாய், சாக்லேட் ரோஸ் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்