கடலூர் முதுநகர் அருகே கச்சா எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் லாரி, சாலையோரம் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மற்றும் சுவர் மீது மோதி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாகை மாவட்டம், நரிமணத்தில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த அந்த டேங்கர் லாரி, அங்கு நின்று கொண்டிருந்த மீன் லாரி மீது மோதி தீப்பிடித்ததில் இருசக்கர வாகனம், 6 கடைகள் எரிந்து நாசம் அடைந்தன. 6 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து கடலூர் முதுநகர் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.