படகை கவிழ்த்து போட்ட ஃபெஞ்சல் சூறைக்காற்று - நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்... வெளியான பரபரப்பு வீடியோ

Update: 2024-12-08 10:03 GMT

ஃபெஞ்சல் புயலின் போது, கடலில் தத்தளித்த கேரள மீனவர்கள் 6 பேரை, தமிழக மீனவர்கள் மீட்டனர். வங்கக் கடலில் அண்மையில் உருவான ஃபெஞ்சல் புயலின் தாக்கம், அரபிக்கடலிலும் காணப்பட்டது.அப்போது, கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து, 6 மீனவர்கள் நாட்டு படகில் அரபிக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது சூறை காற்று காரணமாக, படகு சேதமடைந்து, கடலில் மூழ்கும் நிலை ஏற்பட்டது. இதனால், 6 மீனவர்களும் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, தேங்காய்பட்டினம் துறை முகத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த குமரி மாவட்ட மீனவர்கள், அவர்களுக்கு உதவினர். மூழ்கும் நிலையில் இருந்த படகை கயிறு மூலம் தங்கள் படகுடன் இணைத்து கரைக்கு இழுத்துக் கொண்டு வர முயன்றனர். எனினும், படகில் தண்ணீர் புகுந்ததால், அது கடலில் மூழ்கியது. படகில் இருந்து கடலில் குதித்து தப்பிய 6 மீனவர்களையும், தமிழக மீனவர்கள் மீட்டு கரை சேர்த்தனர். இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்