பைக்கில் உட்கார்ந்த படியே பலியான விவசாயி - பார்த்து பார்த்து கதறி அழுத உறவினர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த ஜம்புகுட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். விவசாயியான இவர் அந்த பகுதியில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை சக்திவேல், தனது மகன் கலையை போச்சம்பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். வீட்டில் இருந்து சென்ற அவர் குள்ளனூர் ஏரிக்கரையில் தனது இருசக்கர வாகனத்தில் அமர்ந்தவாறு வெட்டு காயத்துடன் பலியாகி கிடந்துள்ளார். அந்த வழியாக சென்றவர்கள் அளித்த தகவலின்பேரில், போச்சம்பள்ளி போலீசார் உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தகலறிந்து வந்த சக்திவேலின் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். சக்திவேலின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறிய அவர்கள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.