"பட்டியலின மக்களின் விவசாயத்தை அழித்து நிலம் மீட்பு" - உடைந்து அழுத விவசாயிகள்
பெருந்துறை அருகே உள்ள திருவாச்சி ஊராட்சியில், பட்டியிலனத்தை சமுதாயத்தினர் வாழ்வாதார மேம்பாட்டிற்கு 4 ஏக்கர் நிலம் கடந்த 1970ல் அரசால் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஏழு தலைமுறைகளாக பொதுமக்கள் இந்த நிலத்தில், நெல் வாலை மற்றும் தென்னை போன்ற பயிர்களை பயிரிட்டு பிழைப்பு நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் திருவாச்சி ஊராட்சியில் குளம் அமைப்பதாக கூறி, அந்த நிலத்தை கையகப்படுத்த ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். அந்த நிலத்தை கையகப்படுத்த நீதிமன்ற உத்தரவை பெற்றனர். தற்போது வருவாய்த் துறையினர் மூலம் பட்டியல் சமுதாயத்தினரின் விவசாய நிலத்தினை டிராக்டர் பொக்லைன் வாகனத்தினை கொண்டு அகற்றினர். இந்த சம்பவத்தால், விவசாயம் செய்து வந்த பட்டியலின மக்கள் நிலைகுழைந்து போய் உள்ளனர்.