"எதை தின்றால் பித்தம் தெளியும் என்பது போல் ஈபிஎஸ் துடிக்கிறார்" - அமைச்சர் காட்டம்
தமிழ்நாடு - கேரளா எல்லை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, கேரளா கழிவுகள் தமிழ்நாட்டிற்குள் நுழைவது பெருமளவு தடுக்கப்பட்டு வருகிறது என்று, அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிகையில், தமிழக எல்லைகளில் கழிவுகளை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாடு - கேரளா எல்லைப்பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதுபோல், எதிலாவது அரசியல் செய்து பேர் எடுக்க, எடப்பாடி பழனிசாமி துடித்துக் கொண்டிருக்கிறார் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டியுள்ளார்.