கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே பயன்படுத்தப்படாத கிணற்றில் விழுந்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டனர். குட்டி யானையை காப்பாற்ற காட்டு யானைக் கூட்டம் கிணற்றைச் சுற்றி வந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் சென்றபோது அவர்களின் வாகனத்தை ஆக்ரோஷமாக தாக்கிய தாய் யானை, பைக் ஒன்றையும் அடித்து நொறுக்கியது. தொடர்ந்து யானைக் கூட்டத்தை விரட்டிய வனத்துறையினர், குட்டியானையை மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.