"ட்ரைனி ஆப்பரேட்டர்களுக்கு வேலையே தெரியல.." "லோடு இறக்க 2,3 நாள்கள்" - துறைமுகத்தில் கொந்தளிக்கும் ஓட்டுநர்

Update: 2024-11-09 07:32 GMT

சென்னை அருகே அதானி மற்றும் காமராஜர் துறைமுகங்களில் சரக்கு கையாள்வதில் ஏற்படும் தாமதம் காரணமாக பாதிப்புக்குள்ளாவதாக லாரி ஓட்டுனர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

பொன்னேரியை அடுத்த காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்திலும், எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகத்திலும் கார்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், உணவு பொருட்கள், பெட்ரோலிய பொருட்கள் ஆகிய சரக்குகளை ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்த துறைமுகங்களுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகள் வந்து செல்லும் நிலையில், துறைமுகத்திற்குள் சரக்கு பெட்டகங்களை கையாளும் பணியாளர்கள் பயிற்சி இல்லாதவர்கள்என்பதால் நாள்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்படுவதாக ஓட்டுனர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எனவே தங்கள் பிரச்சினைக்கு அரசு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்